எஸ்.பி.பி உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டும்…! கனிமொழி டுவீட்

15 August 2020, 8:41 pm
kanimozhi 02 updatenews360
Quick Share

சென்னை: எஸ்.பி.பி உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று திமுக எம் பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அண்மையில் கொரோனா பரிசோதனையை  மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவர் கவலைக்கிடமாக உள்ளார், தீவிர சிகிச்சையில் உள்ளார்  என்று மருத்துவமனை அறிவித்தது.

இந் நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஏராளமானோர் பிரார்த்தனை செயது வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளதாவது:

இலட்சக்கணக்கான பாடல்களின் வழியாக நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட எஸ்பிபி அவர்கள் இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

எந்த குரலை கேட்காது ஒருநாளைக்கூட தாண்டிப்போவது சாத்தியமில்லையோ, எந்த குரல் மக்களின் மகிழ்ச்சியையும் வலிகளையும் அன்றாடம் பகிர்ந்துகொண்டதோ, எந்த குரல் தன் பாடலின் வழி ஒரு நிகழ் கலையையே நடத்திடுமோ, அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உடல்நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 30

0

0