‘இதுதான் 20 கிலோவா..?’.. அரிசியை எடைபோடுவதில் முறைகேடு.. ரேஷன் கடையில் குளறுபடி ; வைரலாகும் வீடியோ ..!!

Author: Babu Lakshmanan
11 February 2023, 12:03 pm

குமரி மாவட்ட தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை ஒன்றில் எடை குறைவாக ரேசன் அரிசி வழங்குவதை நிரூபிக்க பயனாளி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

குமரி மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லையில் உள்ள நியாயவிலைக்கடை ஒன்றில் பயனாளி ஒருவர் அரசி வாங்க சென்றபோது, அரிசியின் எடை குறைவாக இருந்ததை கண்டு சந்தேகமடைந்தார். உடனே கடையில் இருந்த பெண் ஊழியரிடம், இது எத்தனை கிலோ உள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்தப் பெண் ஊழியர் 20 கிலோ என பதில் கூற, சற்றும் தாமதிக்காமல் எடைபோட்டு வழங்கிய அரிசி சாக்கு மூட்டையை, அங்கிருந்த எடை மெஷினில் தூக்கி வைத்து எடைபோட்டு பார்த்துள்ளார். அதில் 17 கிலோ அரிசிதான் இருந்தது.

இதனையடுத்து அதே பயனாளி காலி சாக்குப்பையின் எடை போக இதில் எத்தனை கிலோ இருக்கும் என கேள்வி எழுப்பினார். அந்த பெண் ஊழியர் பதில் ஏதும் பேசாமல் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார்.

அந்தக் கடையில் மக்கள் பார்வைக்கு எடை இயந்திரம் வைக்கப்படவில்லை எனவும், அவர்கள் பார்வைக்கு மட்டும் வைத்து, மக்களை ஏமாற்றி அரிசியின் எடையை குறைத்து வழங்கி, மீதம் வரும் அரிசிகளை கடத்தல் தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு வழங்கி அதிக லாபம் ஈட்டி வருவதாகவும் அவர் குற்றச்சாட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பந்த ரேஷன் கடையின் ஊழியர் மீது மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பெரும்பாலும் இதுபோன்ற குளறுபடி நடப்பதாகவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இதனை சீர்செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!