காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று உச்சகட்டம் : கொரோனா பாதிப்பால் அதிரும் மாவட்டங்கள்..!

15 July 2020, 4:49 pm
Corona_Virus_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டமான சென்னையில் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் முன்பை விட தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 154 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,245 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல, செங்கல்பட்டில் இன்று 121 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,674 ஆக அதிகரித்துள்ளது. 5,695 பேர் குணமடைந்துள்ளனர்.