காஞ்சிபுரம் அருகே ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை : கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

2 July 2021, 12:29 pm
Quick Share

காஞ்சிபுரம் அருகே முகம் சிதைந்த நிலையில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவித் தண்டலம் கிராமத்தில் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் தமிழ்வேந்தன் (25). இவர் அங்குள்ள வயல்வெளி ஒன்றில் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றிய சாலவாக்கம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கொலை செய்யப்பட்டுள்ள தமிழ்வேந்தன் மீது காவல்நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில்வ உள்ளனர். இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்..? கொலை செய்தது யார்..? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Views: - 203

0

0