வியாபாரம் பேச வந்த வியாபாரியிடம் மோசடி… ரூ. 16 லட்சத்தை சுருட்டிய வாலிபர் கைது..!!!

12 April 2021, 8:16 pm
Kumari theft - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நெல்லை வியாபாரியிடம் வியாபாரம் பேச அழைத்து 16 லட்சம் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் அமுல் ராஜ்(38). இவர் பலசரக்கு மொத்த வணிகம் பல மாவட்டங்களில் செய்து வருகிறார். இவரை கடந்த 11 ந்தேதி வியாபார ரீதியாக பேச வேண்டும் என்று குமரி மாவட்டம் அருமனையை சேர்ந்த பபி(31) என்பவரை அழைத்துள்ளார். அமுல்ராஜும் குமரி மாவட்டம் வந்து பபியை சந்தித்தார்.

அப்போது பபியின் நண்பர் கரூரை சேர்ந்த ராஜா என்பவர் காரில் இருந்த அமுல்ராஜின் 16 லட்சம் ரூபாயை எடுத்து விட்டு இருவரும் தப்பி சென்றனர். உடனே அமுல்ராஜ் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

பின்னர், குற்றவாளியை பிடிக்க தக்கலை காவல் ஆய்வாளர் சுதேசன் தலைமையில் போலீசார் களமிறங்கினர்.இந்நிலையில் இன்று பாபியை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 27

0

0