ரூ.10 லட்சம் கேட்டு லாரி உரிமையாளர் கடத்தல் : மாஸ் காட்டிய போலீஸ்… 6 பேர் கைது..!!

15 April 2021, 3:50 pm
kumari 1 - updatenews360
Quick Share

தஞ்சை : கும்பகோணத்தில் ரு. 10 லட்சம் கேட்டு லாரி உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மன்னார்குடியைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கும்பகோணத்தில் செட்டிமண்டபத்தை சேர்ந்தவர் பசீர் அகமது. இவர் டாரஸ் லாரிகளை வாடகைக்கு விட்டு வருகிறார். இந்நிலையில், மன்னார்குடியை சேர்ந்த சேகர் என்பவர் மன்னார்குடியில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் இருந்து மதுபானங்களை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு சென்று இறக்குமதி செய்யும் முகவராக இருந்து வருகிறார். கடந்த ஒருவருடத்திற்கு முன்பு மன்னார்குடியை சேர்ந்த சேகர் என்கிற தண்டாயுதபாணி மன்னார்குடி மதுபான ஆலையில் இருந்து ராமநாதபுரத்திற்கு மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும் என பசீர்அகமதுவிடம் டாரஸ் லாரியை வாடகைக்கு எடுத்து அனுப்பியுள்ளார்.

ராமநாதபுரத்திற்கு மதுபானங்களை கொண்டு செல்லும்போது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் முகவர் சேகருக்கு ரு. 10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் விபத்தில் சேதமாகாத மதுபாட்டில்களை பசீர் அகமது நன்னிலம் பகுதியில் பதுக்கி வைத்து அனைத்து மதுபானங்களும் சேதமடைந்து விட்டதாக முகவர் சேகரிடம் தெரிவித்து, அந்த மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து ரகசிய தகவலின் பேரில் நன்னிலம் காவல்துறையினர் மதுபாட்டில்களை பதுக்கிவைத்த இடத்திற்கு சென்று மீதமுள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பசீர் அகமது உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ரு.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதற்கு லாரி உரிமையாளர் பசீர் அகமதுதான் காரணம் என முகவர் சேகர் பசீர் அகமதுவிடம் கடந்த சில மாதங்களாக பணம் கேட்டு வந்துள்ளார்.

ஆனால் பசீர் அகமது பணம் தரமுடியாது என சேகரை மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் தனது கூட்டாளிகளான பரமேஸ்வரன், சுவாமிநாதன், கண்ணதாசன், அப்துல்குத்தூஸ், கவிதீபன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து கடந்த 13ம் தேதி செகுசு கார் முலம் செட்டி மண்டபத்தில் உள்ள பசீர்அகமது வீட்டிற்குச் சென்று அவரை கடத்தி சென்றனர். பின்னர், பசீர் அகமது மனைவி அஷ்மாபேகத்திடம் தொலைபேசி மூலம் ரு. 10 லட்சம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால், உன் கணவர் பசீர் அகமதை கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து, கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் அஷ்மாபேகம் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மன்னார்குடி காரக்கோட்டை என்ற இடத்தில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது இதையடுத்து, தனிப்பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல்துறையினர் மன்னார்குடிக்கு சென்று பசீர் அகமதுவை மீட்டு, சேகர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 6 பேருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் ரு.10 லட்சம் பணம் கேட்டு லாரி உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 38

0

0