கழிவறையில் கேமரா பொருத்தி பெண் ஊழியர்களின் ஆபாச படம் : தனியார் நிறுவன உரிமையாளர் கைது

30 January 2021, 12:21 pm
Kumari accused - updatenews360
Quick Share

குமரி குமரியில் அலுவலக கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண்களை படம் பிடித்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் சஞ்சு (29). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செட்டிகுளம் பகுதியில் z3 இன்போடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தை துவங்கியுள்ளார். மேலும், அந்த நிறுவனத்தில் மூன்று பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இந்த நிலையில், நேற்று திடீரென பெண்கள் கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளை சஞ்சு செய்து வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள், அவரிடம் இதற்கான விளக்கத்தை கேட்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து, அந்த பெண்கள் கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் சஞ்சுவை கைது செய்ததுடன் அவர் பொருத்திய சிசிடிவி கேமரா அவரது லேப்டாப் ,ஹார்ட் டிஸ்க்  உள்ளிட்டவையும் பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1

0

0