பணி முடிந்தும் பணம் தர மறுக்கும் அதிகாரிகள் : பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் உள்ளிருப்பு போராட்டம்

Author: Babu Lakshmanan
1 October 2021, 6:11 pm
kumari protest - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: பணி முடித்து கொடுத்த பின்னரும் காசோலை கொடுக்க மறுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஒப்பந்ததாரராக பணியாற்றி வருபவர் மில்லன். இவருக்கு அத்திக்கடவு சானலை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். பின்னர் அரசு நிர்ணயித்த சரியான கால அவகாசத்திற்குள் இவர் அந்த பணியை முழுவதுமாக முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பணி முடிந்து அதற்கான காசோலையை மில்லனிடம் வழங்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இவரை அலைக்களிப்பதாகவும், காரணம் கேட்டால் பதில் கூறாமல் செல்வதாகவும் கூறி இன்று நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் வந்த மில்லன் திடீரென அழுவலகத்தினுள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மில்லன் கூறுகையில், “பணி முடிந்து கொடுத்த பணம் வந்த பிறகும் அதனை அதிகாரிகள் தர மறுப்பது ஏன்..? ஊழல், லஞ்சத்தை அதிகாரிகள் எதிர்பார்கிறார்களா…? கூறினார்.

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக கனிமவளம், போக்குவரத்து துறையில் லஞ்ச் ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்திய நிலையில், மில்லனின் இந்த குற்றச்சாட்டால் லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த ரெய்டு பொதுப்பணித்துறை நடைபெறுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 552

0

0