குமரியில் உள் வாங்கிய கடல் : 2 மணி நேரம் படகு போக்குவரத்து நிறுத்தம்..!!

Author: Babu Lakshmanan
25 August 2021, 7:13 pm
Quick Share

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் திடீரென இன்று கடல் உள் வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட லேசான நில நடுக்கத்தின் தாக்கம் கன்னியாகுமரில் எதிரொலித்தது. கன்னியாகுமரியி கடற்கரை பகுதியில் கடல் அலையில் மாற்றம் காணப்பட்டதால் உடனடியாக படகு சேவை நிறுத்தப் பட்டது.

இந்நிலையில் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் மட்டம் குறைந்து கடல் உள்வாங்கியது. இதனால் கரையோரம் கடலுக்கு அடியில் உள்ள பாறைகள் வெளியில் தெரிந்தது. கடல் உள்வாங்கிய காட்சியை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்நிலையில் காலை துவங்கப்பட வேண்டிய கன்னியாகுமரி விவேகானந்த பாறைக்கு படகு சேவை துவங்கப்பட வில்லை. பின்னர் நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து படகு சேவை ஆரம்பமானது.

Views: - 376

0

0