கோவில் கருவறையை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு.! பக்தர்கள் அதிர்ச்சி

15 April 2021, 1:30 pm
kumari gold - - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி அருகே இசக்கியம்மன் கோவிலில் கருவறையை உடைத்து அம்மனுக்கு அணிவித்து இருந்த சுமார் ஒன்னரை கிலோ எடையுள்ள வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வடக்கூர் பகுதியில் தனி நபர்களுக்கு சொந்தமான இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை, மாலை என இருகால பூஜைகளும் பிற நாட்களில் ஒருகால பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் ஆரல்வாய்மொழி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று சித்திரை வருட பிறப்பையொட்டி அம்மனுக்கு வெள்ளியிலான கீரிடம் அணிவித்து சிறப்பு பூஜைகள் முடித்து விட்டு இரவு கோவிலிலை மூடிவிட்டு பூசாரி முருகன் சென்று விட்டார். பின்னர், வழக்கம் போல் இன்று காலை கோவிலை திறந்தவருக்கு கருவறை கதவு உடைக்கப்பட்டு ஒன்னரை கிலோ எடையுடைய அம்மனுக்கு அணிவித்து இருந்த வெள்ளி கிரீடம் கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும், உண்டியலை உடைக்க முடியாமல் தூக்கி வீசப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவலில் அடிப்படையில் கொள்ளை நடந்த கோவிலுக்கு வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 30

0

0