கல்லூரி வாகனம் மீது நேருக்குநேர் மோதிய கார்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!!

Author: Babu Lakshmanan
5 April 2022, 1:00 pm

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் கல்லூரி வாகனம் மீது சொகுசு கார் மோதி விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வாகனம் ஒன்று நேற்று மாலை வழக்கம் போல, மாணவ,மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, மாத்திரவிளை பகுதியில் வைத்து எதிரே வந்த பொலிரோ வாகனம் ஒன்று அதிவேகமாக கல்லூரி வாகனம் மீது மோதி உள்ளது.

இதில் இரண்டு வாகனங்களின் முன்பக்கம் உடைந்து பலத்த சேதம் அடைந்துள்ளது. திர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://vimeo.com/696001501
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!