கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் : ராட்சத அலையில் சிக்கிய சிறுவன்!!

30 September 2020, 11:12 am
Kanyakumari boy - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மண்டைகாடு புதூர் கடற்கரையில் கிரிக்கட் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவனை  ராட்சத அலை இழுத்து சென்றதால் சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர்  சகாய ராபின். இவரது மகன் 10 வயதான ரோகித் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், சிறுவன் ரோகித், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன்  வீட்டு அருகே உள்ள கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலை எதிர்பாராதவிதமாக ரோஹித்தை இழுத்துச் சென்றது.

இதைக்கண்டு இவரோடு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அலறியதைத் தொடர்ந்து அப்பகுதியினர் விரைந்து வந்து ரோஹித்தை மீட்க முயற்சித்தனர். அதற்கிடையே, கடல் அலை இழுத்துச் சென்றதால் ரோஹித்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது ஊர்மக்களும் கடலோர காவல் குழுமத்தைச் சேர்ந்த போலீசாரும் தீவிரமாக சிறுவனை தேடி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.