மலை வழியாக கேரளாவிற்கு பைக் மூலம் கஞ்சா கடத்தல் : 40 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள்!!

Author: Udayachandran
8 October 2020, 2:42 pm
Kanja Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழக கேரள எல்லை மலையோர பகுதி வழியாக கேரளாவிற்கு மூன்று இருசக்கர வாகனங்களில் பதுக்கி கேரளாவிற்கு கடந்த முயன்ற நாற்பது கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஆறு இளைஞர்களை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை மலையோர பகுதியான களியல்- நெட்டா சோதனை சாவடியில் அருகே களியல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு இளைஞர்கள் போலீசாரை பார்த்தும் தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது அவர்களை விரட்டி பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த நாற்பது கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் விபின், ஷைன்ஜோஸ், விசாக், ஜிஸ்ணுராஜ் ஆகியோர் கேரளாவை சார்ந்தவர்கள் என்றும் பெர்ஜின், பெர்லின் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் அவர்கள் ஊரடங்கு நேரத்தில் மது கிடைக்காததால் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி அதே தொழிலாக தொடர்ந்ததும் தெரிய வந்துள்ளது

Views: - 39

0

0