தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்து இன்றுடன் 64வது ஆண்டு : அரசு சார்பில் மரியாதை!!

1 November 2020, 5:44 pm
Kanyakumari - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தாய்த் தமிழகத்துடன் இணைந்து இன்று 64 -ஆவது ஆண்டு தொடங்குவதை யொட்டி நாகர்கோவிலில் உள்ள நேசமணி மணி மண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் எம். அரவிந்த் மற்றும் திமுக காங்கிரஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பண்டையகாலத்தில் கன்னியாகுமரி  மாவட்டம் கொச்சி சமஸ்தானத்தின் கீழ் இருந்தது.அப்போது தமிழ் மொழி பேசும் மக்களின் கல்வி உள்ளிட்ட  அடிப்படை உரிமைகள்  மறுக்கப்பட்டன .

1948 ஆண்டு கால கட்டங்களில் கேரளாவோடு இருந்த குமரி மாவட்டம் பிரித்து தமிழகத்துடன் இனைக்க வேண்டும் என்ற போராட்டம் தொடங்கியது.   மார்ஷல் நேசமணி தலைமையில் தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என போராட்டம் எழுந்தது. 

தமிழர்கள் அதிகம் வாழ்ந்த குமரி மாவட்டம், நெய்யாறு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை இணைக்க வேண்டும் என போராட்டம் நடந்தது. போராட்டம் தீவிரமானதால் போராட்டத்தை ஒடுக்க கேரளா  போலிஸ்  தடியடியும் புதுக்கடை, மார்த்தாண்டம், எஸ் டி மாங்காடு, உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி சூடும் நடந்தியது. 

இதில் பத்துக்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் மாயமானார்கள். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன்  1956 ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி  இணைத்தனர். 

தாய் தமிழகத்தோடு குமரி மாவட்டம் இனைந்து இன்றுடன்  64ஆவது ஆண்டு துவக்கம் ஆகிறது இந்த தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் எம்.அரவிந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

மேலும் நாகர்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் ,கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உட்பட காங்கிரஸ் ,திமுக ,அமமுக, பாமக , பனங்காட்டுபடை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Views: - 26

0

0