தனியார் உணவகத்தில் பயங்கர தீ விபத்து : 1 மணி நேரம் போராடிய தீயணைப்புத்துறையினர்!!

25 August 2020, 3:11 pm
Kanyakumari Hotel Fire- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சந்திப்பில் பிரபல தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இன்று மதியம் பெண் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது ஓட்டல் ஊழியர்கள் ஏசியை இயக்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஏசியில் இருந்து புகை வர ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து அவசரம் அவசரமாக வெளியேற்றினர். மேலும் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ பரவி எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து ஓட்டல் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

அப்போது ஓட்டல் உள்பகுதியில் 4 எரிவாயு சிலிண்டர் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி 4 சிலிண்டர்களையும் வெளியே கொண்டு வந்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

மாவட்டத்தின் முக்கிய பகுதியான கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Views: - 29

0

0