குடும்பம் என கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம்.!

19 August 2020, 2:16 pm
Kanyakumari Prostitution- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசார தொழில் செய்து வந்த வெளி மாநில பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சற்குணவீதி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 4 ஆண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த விபச்சார கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விபச்சார கும்பல் வீடு வாடகை எடுத்து ஒரு குடும்பம் போல் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம்  நாகர்கோவிலை அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்து தங்கியிருந்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் மற்றும் புரோக்கராக செயல்பட்ட குமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரதாப் குமார் (வயது 55), தோவாளை பகுதியை சேர்ந்த பூதலிங்கம் (வயது 60 )ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான வீட்டு உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 10 க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 52

0

0