ஐஎஃப்எஸ்-ல் பணிபுரிய ஆர்வம்.! யூபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவன் பேட்டி.!!

4 August 2020, 2:50 pm
TN First Place Student In UPSC - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : இந்திய வெளி விவகார துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளதாக தேசிய அளவிலான யூபிஎஸ்சி – சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் முதல் இடமும், அகில இந்திய அளவில் ஏழாவது இடமும் பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னைநகர் மத்திய அரசு ஊழியர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் கணேஷ் குமார் பாஸ்கர் . இவர் யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் ஏழாவது இடமும் தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

பள்ளிப்படிப்பை குர்கான் உட்பட பல்வேறு பகுதிகளிலும், பிளஸ் டூவுக்குப் பிறகு கான்பூர் ஐஐடி யில் பிடெக் கம்ப்யூட்டர் படிப்பும், அகமதாபாத் ஐஐஎம் மில் எம்பிஏ படிப்பு முடித்தார். இதனையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆன்லைன் மூலமாக யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயார் ஆனார். தேர்வு முடிவுகளை யூபிஎஸ்சி சார்பில் இன்று வெளியிடபட்டன.

இந்த தேர்வில் அகில இந்திய அளவில் ஏழாவது இடமும் தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றார். இவர் ஐஏஎஸ் பணிக்கு செல்வதை விட ஐஎஃப்எஸ் எனப்படும் வெளி விவகார துறையில் பணிபுரியவே ஆர்வம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Views: - 6

0

0