“ஏன் இவங்களுக்காக வாய திறக்கல“? ஸ்டாலினை மறைமுகமாக தாக்கிய கார்த்தி சிதம்பரம்!!

27 November 2020, 4:17 pm
Karthi Chidambaram stalin - Updatenews360
Quick Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரளிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். 7 பேருக்கும் விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு ஆண்டுகளும் கடந்தது.

ஆயுள் தண்டனை கைதிகள் என்பதால் அவர்களின் நடத்தையின் அடிப்படையில் 14 வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். இதன் காரணமாகவே ஏழு பேரும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழக அரசும் 7 பேர் விடுதலைக்கு எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காமல், 7 பேரை விடுதலை செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக அமைச்சரவையும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியும் வைத்து விட்டனர்.

ஆண்டுகள் கடந்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளதால் அவரை தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தாங்கள் எந்த விதத்திலும் தலையிட முடியாது என்றும், இது தொடர்பாக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்த நிலையில ஆளுநர் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தது குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டடினை பெற்றுள்ளவர்களை சட்ட ரீதியாக விடுவிக்க வழியிருந்தால் விடுவிக்கலாம் என்றும், ஆயுள் தண்டனை பெற்றவர்களை ஹீரோவாக்க கூடாது என கூறியுள்ளார்.

மேலும் ராஜீவ் காந்தியுடன் கொலையான தர்மன், சாந்தணிபேகம், ராஜகுரு, சந்திரா உள்ளிட்ட 13 பேரின் குடும்பத்தினருக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா என விமர்சனம் செய்துள்ளார். கார்த்திக் சிதம்பரம் போட்ட டுவிட்டால் திமுக – காங்கிரஸ் இடையே பனிபோர் நிலவி வருகிறது.

Views: - 24

0

0