கே.ஜி.எப் படத்தால் கார்த்தி-க்கு ஏற்பட்ட பகை – ட்டுவிட்டரில் வச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்..!

Author: Rajesh
17 April 2022, 1:57 pm
Quick Share

கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். பான் இந்திய படமாக வெளியான கே ஜி எஃப்2 உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. பல பிரபலங்களும் இப்படத்தைப் பற்றி தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு நடிகர் கார்த்தியும் கேஜிஎஃப்2 படத்தைப் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுயிருந்தார்.

அதில் ஏதாவது மிகப்பெரிதாக கற்பனை செய்து அதை முழுமையான பாணியுடன் வழங்குவது மிகப் பெரிய கைதட்டலுக்கு அழைப்பு விடுக்கிறது. அவ்வாறு காட்சிகள், வசனம், சண்டைக்காட்சிகள் என அனைத்து மகத்துவத்தையும் உயர்த்தி ஒரு தாயின் கனவு சக்தியை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும் கேஜிஎஃப் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என கார்த்தி பதிவிட்டிருந்தார்.

மேலும் கேஜிஎஃப் படத்தை கார்த்தியின் உறவினரான எஸ்ஆர் பிரபு தான் படத்தை வெளியிட்டுள்ளார். கேஜிஎஃப் படத்தை புரமோஷன் செய்வதற்காக கார்த்தி புகழ்ந்து பேசி உள்ளார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சொந்த மொழியில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் படத்தைப் பற்றி எதுவும் பதிவிடாமல் வேறு மொழி படத்தை கார்த்தி புகழ்ந்து பேசி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போ அடுத்து கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் விருமன் படத்தை ட்டுட்டரில் விஜய் ரசிகர்கள் வச்சு செய்வார்கள் தான் போல…

Views: - 844

8

7