களைகட்டிய கார்த்திகை தீபம்…
சாரதாம்பாள் கோவிலில் மிளிர்ந்த 10 ஆயிரம் அகல் விளக்குகள்.. பக்தர்கள் பரவசம்..!!

Author: Babu Lakshmanan
21 November 2022, 10:54 am

கோவை : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சாரதாம்பாள் கோவிலில் 10 ஆயிரம் அகல்விளக்குகள் ஒளிரவிடப்பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.

கார்த்திகை தீபத் திருநாள் வரும் டிசம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாரதாம்பாள் கோவிலில் பத்தாயிரம் அகல் விளக்குகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர்.

coimbatore lights - updatenews360

இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அகல் விளக்கேற்றி பிரமாண்ட சாதனையை செய்தனர். ஒரே நேரத்தில் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஒளிர விடப்பட்ட காட்சிகள் பக்தர்களை பரவசப்படுத்தியது.

coimbatore lights - updatenews360
coimbatore lights - updatenews360
coimbatore lights - updatenews360
  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?