ரூ.3.30 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆதீமாரியம்மன் : செல்வம் பெருக வேண்டி பக்தர்கள் வழிபாடு..!!

Author: Babu
31 July 2021, 1:30 pm
karur god1 - updatenews360
Quick Share

கரூர் : ஆடி இரண்டாவது வெள்ளியினை முன்னிட்டு 3.30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரரிக்கப்பட்ட சுங்ககேட் அருள்மிகு ஸ்ரீ ஆதிமாரியம்மiன பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

கரூர் அடுத்த சுங்ககேட், பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதிமாரியம்மன் ஆலயத்தில் நேற்று ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையினை முன்னிட்டு, மூலவர் ஆதிமாரியம்மன் அம்மனுக்கு உலக மக்கள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ. 200, ரூ. 500 ஆகிய புதிய ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் மக்கள் கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுவதையடுத்து, மக்கள் யாவரும் செல்வ செழிப்புடன் வாழவும், நோய் நொடியின்றி வாழவும் வேண்டி புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. இன்று ஒரு நாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட இந்த ரூபாய் நோட்டுகளை வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். மேலும், செல்வ செழிப்புடன் உள்ள ஆதிமாரியம்மனை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பதினால் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. மேலும், அம்மனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மஹா தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Views: - 270

0

0