பிரதமருக்கு வடை அனுப்பி AIYF அமைப்பினர் நூதன போராட்டம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விநோதம்!!

14 July 2021, 3:33 pm
pm modi vadai 1 - updatenews360
Quick Share

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வடை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரனோ பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்திட தவறிய மோடி அரசை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு தேவையான கொரனோ தடுப்பு மருந்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வடை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

அந்த அமைப்பின் கரூர் மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன் தலைமையில் ஆர்.எம்.எஸ் தலைமை தபால் நிலையம் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாயில் வடை சுடும் பிரதமர் மோடிக்கு உண்மையான வடை அனுப்புகிறோம் எனக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்பு, பேருந்து நிலையத்தில் ஏற்கனவே சுட்டு வைக்கப்பட்டிருந்த 15 மெது வடையை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்த அவர்கள் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, அந்த வடையை சிறிய கவரிம் ஒரு வடையையும், பெரிய கவரில் 2 வடையும் போட்டு, தமிழில் பிரதமர், தலைமை செயலாகம், டெல்லி என்று முகவரிக்கு ஆர்.எம்.எஸ் தபால் நிலைய தபால் பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனர்.

Views: - 188

0

0