அமரவாதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயம் : 2வது நாளாக தேடும் பணி தீவிரம்…!!

Author: Babu Lakshmanan
6 December 2021, 4:02 pm
Quick Share

கரூர் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயமான இளைஞரை 2 வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (23). HDFC வங்கியில் கலெக்சன் ஆபிசர் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை சுமார் 4.15 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு தனது நண்பர் பிரகாஷ் உடன் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு சிறிது தொலைவில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழை நீருடன், அணையிலிருந்து உபரி நீரும் அமராவதி ஆற்றில் சென்று கொண்டுள்ளது.

இதனால் நீரின் இழுவை திறன் அதிகமாக இருந்ததால் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் புவனேஷ் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். இளைஞர் மாயமாகிய நிலையில் நண்பர்கள் அச்சமடைந்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் இளைஞர் கிடைக்காததால் இருட்டாக துவங்கியதால் மூழ்கிய இளைஞரை தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

இதனை தொடர்ந்து, இன்று காலை 6 மணி முதல் புகழூர், கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் 2 குழுக்களாக பைபர் படகில் தேடி வருகின்றனர். இதுகுறித்து கரூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி மாயமான சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 279

0

0