சூறை காற்றுடன் பெய்த கனமழை… 2,500 வாழை மரங்கள் தாருடன் சாய்ந்து நாசம்.. வருஷத்திற்கு வருஷம் மோசமாகும் விவசாயம்… கண்ணீர்விடும் விவசாயிகள்…!!

Author: Babu Lakshmanan
11 April 2022, 4:23 pm
Quick Share

கரூரில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2500 வாழை மரங்கள் தாருடன் சாய்ந்தது.

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறாவளிக் காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, வாங்கல் கிராமத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை மரம் பயிரிட்டுள்ளார். அதில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இருந்த 2500 வாழைமரங்கள் பாதியோடு முறிந்து விழுந்தது.

இன்னும் ஒரு மாத காலத்தில் வாழைதார் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் தாருடன் வாழை மரம் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பலரும் வாழை விவசாயத்தை கைவிட்ட நிலையில், ஒரு சில விவசாயிகள் மட்டும் இப்பகுதியில் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அவர்கள் கூறியதாவது :- உரம், யூரியா விலையை குறைக்க வேண்டும். உரம் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை விவசாயத்திற்கு ஈடுபடுத்த வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடி வரும் சூழ்நிலையில், அதற்கு காரணம் அந்த அரசாங்கம் திடீரென்று இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதுதான்.

உரம், யூரியா போன்ற பொருட்களை இறக்குமதி செய்தால், அந்நியச் செலாவணி போய்விடும் என்பதால் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். திடீரென்று இயற்கை விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில், உணவு பற்றாக்குறை தற்பொழுது இலங்கை நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு, மாநில அரசு உரம் விலை ஏற்றம் ஆள் பற்றாக்குறை இயற்கை பாதிப்பு இதே போன்ற சூழ்நிலை விவசாயத்தை புறக்கணித்தால் உணவுப் பஞ்சம் இங்கும் ஏற்படும்  என்று அப்பொழுது தெரிவித்தார்.

Views: - 753

0

0