8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 72 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை

Author: kavin kumar
8 October 2021, 8:49 pm
Quick Share

கரூர்: கரூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கரூர் மாவட்டம் பள்ளபட்டியை அடுத்த பாப்பநாயக்கன்பட்டியில் கடந்த 2020ம் ஆண்டு வீட்டிற்கு முன்பு 8 வயது சிறுமி குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நாட்ராயன் என்கின்ற 70 வயது முதியவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமியை காணாத பெறரோர் தேடிய போது நாட்ராயன் வீட்டில் இருந்து சிறுமியை மீட்ட பெற்றோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பெயரில் அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் நாட்ராயனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி நசீமா பானு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி நாட்ராயனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Views: - 264

0

0