வடிகால்வாய் பிரச்சனை… மின்வாரிய ஊழியர் கல்லால் அடித்துக் கொலை : ஒருவர் கைது… மற்றொருவருக்கு வலைவீச்சு.!!

Author: Babu Lakshmanan
18 December 2021, 4:58 pm
Quick Share

கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வடிகால்வாய் பிரச்சினை காரணமாக மின்வாரிய ஊழியரை, கல்லால் அடித்து கொலை செய்த இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த அய்யாமலையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மாணிக்கவாசகம். இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும், முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது தாய் இருவரும், மாணிக்கவாசகத்தை தகாத வார்த்தைகள் பேசி திட்டியதாகவும், கல்லை எடுத்து அவர் தலையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Views: - 398

0

0