டிக் – டாக் போனால் என்ன ? இதோ நமது தமிழ் இளைஞர்களின் புதிய ஆப் !!

3 August 2020, 10:34 pm
Quick Share

கரூர் அருகே செல்லாண்டிப்பாளையம் பகுதியினை சார்ந்தவர் சிவக்குமார், இவரது மூத்த மகன் அபிஷேக் (வயது 21), இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் டூ முடித்து விட்டு, சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டே படிப்பினை பாதியில் விட்டார். இந்நிலையில், தற்போது டிக் டாக் போன்ற சீன ஆப்புகளுக்கு நிகராக இவர் கண்டுபிடித்துள்ள chillbro என்கின்ற ஆப் தற்போது அதிகளவு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு ஆப்பிற்கு நிகராக அனைத்து வசதிகளையும் உடையே இன்னொரு ஆப் ஆனது., அதுவும் இந்தியாவில், ஒரு தமிழ் இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் என்று சுமார் 10 பேர் அடங்கிய லீடப் டெக்னாலஜி என்கின்ற நிறுவனம் தற்போது டிக்டாக் என்கின்ற ஆப்பிற்கு நிகராக மட்டுமில்லாமல், மேலும் மூன்று வகையான ஆப்புகளையும் நிர்வகித்து வருகின்றனர். பேஸ்புக்கிற்கு பதிலாக தோஸ்த்துடா தற்போது டெஸ்ட்டிங் போய் வருவதாகவும்,

ஒரிரு தினங்களில் இது launch ஆக உள்ளதாக இதன் நிர்வாகி அபிஷேக் தெரிவித்துள்ள நிலையில், ஏற்கனவே டிக்டாக்கிற்கு நிகராக கண்டுபிடித்த சில்புரோ என்கின்ற ஆப் (செயலி) உலகளவில் மலேசியா, சிங்கப்பூர், துருக்கி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெருமளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், ஆன்லைனில் கேமிங் என்கின்ற ஆன்லைன் ஊழலை தவிர்க்க ஒரு புதிய செயலியையும் (ஆப்) கண்டுபிடித்துள்ளனர்.

இது மட்டுமில்லாமல், ஒரிரு மாதங்களில் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்துறையில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு செயலியையும் (ஆப்) தயாரிக்க உள்ளனர். இதுமட்டுமில்லாமல், சரியான நிதியுதவி கிடைக்காத்தினாலும், அரசின் சலுகைகள் கிடைக்காததினாலும் தற்போது குன்றின் மேல் இருப்பவர்கள், குடத்திற்குள் உள்ளவாறு இவர்களது திறமை இருப்பது குறிப்பிட்த்தக்கது.

மேலும், தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்தியர்களும் இந்த ஆப்பினை டவுன்லோடு செய்து அதன் மூலம் ஏதாவது கிடைத்தால் இந்தியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பல்வேறு கிடைக்க தற்போதே பவுண்டேஷன் ஒன்றினையும் நிறுவி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டிக்டாக்கிற்கு நிகராக சிங்காரி ஒன்றினை பெங்களூருவை தலைநகராக கொண்டு இயங்கும் போது, உயர்தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒரு தமிழன் கண்டுபிடித்துள்ள சில்புரோ என்கின்ற ஆப்பும்,

விரைவில் ஒரிரு தினங்களில் லாஞ்ச் ஆக உள்ள பேஸ்புக்கிற்கு நிகரான தோஸ்த்துடா ஆப்பும் விரைவில் வளர்ச்சி அடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பல்வேறு துறைகளில் பலவித அற்புதங்களை ஒரு தமிழன் உலகளவில் நிகழ்த்தி வரும் நிலையில், இந்தியாவில், அதிலும், தமிழ்நாட்டில், குறிப்பாக கரூர் மாவட்டத்தில், உள்ள செல்லாண்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு இளைஞன் உருவாக்கத்தில் ஒரு இளைஞர்கள் பட்டாளம் 10 நபர்கள் அடங்கிய இளைஞர்களின் திறமை ஒரிரு தினங்களில் மற்றும் ஒரிரு மாதங்களில் வளர்ச்சி பெறும்.

Views: - 1

0

0