மீண்டும் தலைதூக்கும் கூலிப்படை அராஜகம்? கரூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை… பழிக்குபழி சம்பவமா..? என போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
6 October 2021, 12:50 pm
Karur murder - updatenews360
Quick Share

கரூர் : கரூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள கருப்பத்தூரில் நாராயணன் மகன் கோபால் வயது 52 பிரபல ரவுடி. இன்று அதிகாலை தன் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றுள்ள பொழுது, அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தலைப் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இவர் மீது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு தயாரித்தல், மற்றும் கொலை குற்றம் என தென்மாவட்டங்களில் 10க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பொன்மணி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த லாலாபேட்டை போலீஸார், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு எஸ்பி சுந்தரவடிவேல் நேரில் ஆய்வு செய்தார்.

Views: - 570

0

0