தடையை மீறி கரூரை ஆக்கிரமித்த பிளக்ஸ் பேனர்கள்… செந்தில் பாலாஜியை கண்டிப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்..?

13 May 2021, 12:09 pm
karur flex 1- updatenews360
Quick Share

நீதிமன்ற தீர்ப்பை மீறி கரூரில் பிளக்ஸ் பேனர்கள் வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சில அறிவுரைகளை முன்வைத்து வைத்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, பள்ளிக்கரணை அருகே 2019 செப்., 12ம் தேதி, டூ – வீலரில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், சாலையிலிருந்த பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், சுபஸ்ரீ படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதையடுத்து, பிளக்ஸ் பேனர் வைக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆரம்பத்தில் இந்த உத்தரவை அமல்படுத்த, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர். ஆனால், காலப் போக்கில், நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள செந்தில்பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக வெற்றியையும், செந்தில்பாலாஜி வெற்றியை கொண்டாடும் வகையில், கரூர் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பேருந்து நிலைய ரவுண்டான பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு உள்ளது அதையும் மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பிளக்ஸ் பேனர்கள் வைக்க நகராட்சியிடம் அனுமதி பெற்று மட்டுமே வைக்க வேண்டும். அந்த அனுமதி எண் பிளக்ஸ் பேனரில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்தவித அனுமதியும் இல்லாமல் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது காற்றாடி காலம் வரும் நிலையில் பிளக்ஸ் & பேனர்கள் சரிந்து விழுந்து, எதாவது, அசம்பாதவிதம் ஏற்படும் முன்பு, அவற்றை அகற்ற வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள். ஆகவே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதன் மீது நடவடிக்கை கட்டாயம் தேவை என்கின்றனர் பொதுமக்களும், மற்ற அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Cm stalin - updatenews360

மேலும், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு பதில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், ஆக்சன் தட்டுப்பாட்டை நீக்க நிதி உதவ திமுகவினர் முன் வரலாம் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

Views: - 360

0

0