4 அடி வாய்க்கல் தண்ணீரில் சடலத்தை தூக்கிச் செல்லும் அவலம்… தீர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் கரையாம்பட்டி மக்கள்…!!

Author: Babu Lakshmanan
28 November 2021, 1:01 pm
Quick Share

கரூர் அருகே கரையாம்பட்டி வடக்கு தெருவில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய 4 அடி ஆழத்தில் உபரிநீர் வாய்க்காலில் தூக்கி செல்லும் அவலத்திற்கு என்று தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், கல்லடை ஊராட்சி, கரையாம்பட்டி வடக்கு தெருவில் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய கல்லடை குளத்திலிருந்து உபரிநீர் செல்லக்கூடிய வடிகால் வழியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்று தான் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்துள்ளனர்.

தற்போது பெய்து வரும் தொடர்மழையால் கல்லடை குளம் நீர் நிரம்பி வழிந்தோடி செல்கிறது. இந்த நிலையில் கரையாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த தம்பிரான் என்பவரின் மனைவி அரியநாச்சி வயது 80. இவர் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். இந்நிலையில் இறந்தவரின் உடலை சுடுகாடு பகுதிக்கு எடுத்துச்செல்ல உரியபாதை இல்லாமல் ஒரு கிலோமீட்டர் வரை உபரிநீர் செல்லும் வாய்க்காலில் 4 அடி ஆழத்தில் உடலை துக்கிகொண்டு பொதுமக்கள் ஆபத்தான நிலையில் செல்கின்றனர். உரியபாதை மற்றும் பாலம் அமைத்து தர இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 270

0

0