கரூர் நீத்தர் நினைவு நாள் அனுசரிப்பு : நினைவு தூணிற்கு 63 குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி
Author: Babu Lakshmanan21 October 2021, 10:46 am
கரூர் : கரூரில் நீத்தர் நினைவு நாள் அனுசரிப்பு – நீத்தார் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து 63 குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
காவல்துறையில் பணியாற்றும் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வருடம் தோறும் அக்டோபர் 21ம் தேதி நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நனைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
நீத்தார் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 63 குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி செலுத்தினர். அப்போது, காவல் கண்காணிப்பாளர் கடந்த ஆண்டு பணியில் இருக்கும் போது உயிர் நீத்தவர்களின் பெயர்களை வாசித்து அதனை தொடர்ந்து 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
0
0