‘தலைக்கு ரூ.200’… காங்., எம்பி ஜோதிமணி கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு பணப்பட்டுவாடா ; வைரல் வீடியோ!!

Author: Babu Lakshmanan
8 September 2023, 2:34 pm
Quick Share

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியின் நிகழ்ச்சிக்கு வந்த பெண்களுக்கு 200 ரூபாய் பண பட்டுவாடா செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு ஒரு வருடம் ஆனது நினைவு கூறும் விதமாக, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கரூர் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர்.

பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை முன்புறம் துவங்கிய இப்பேரணி ஜவஹர் பஜார், ஆசாத் சாலை வழியாக சென்று மாநகராட்சி பூங்காவில் முடிவடைந்தது. மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, ‘அன்பை விதைப்போம், பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம்’ என கோஷம் எழுப்பி பேரணியை முடித்துக் கொண்டனர்.

பின்னர் பேரணியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தலைக்கு 200 ரூபாய் வழங்கப்படும் எனக்கூறி வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான கணக்கெடுக்கும் பணியில் கரூர் ஆசாத் பூங்காவில் காங்கிரஸ் பெண் நிர்வாகி மும்பாரமாக ஈடுபட்டனர். இதற்கான எண்ணிக்கை விட்டுப் போகுமோ என எண்ணி காங்கிரஸ் நிர்வாகி நோட்டு போட்டு எழுதியது பூங்காவில் உள்ள அனைவரையும் சிரிப்பலையை உள்ளாக்கியது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, ஏழை பெண்மணி என பல்வேறு பொய்களைக் கூறி தேர்தல் வெற்றி பெற்ற பின்னர் தொகுதி மக்களுக்கு இதுவரை என்ன செய்தார் எம்பி ஜோதிமணி. மக்கள் நலன் திட்டங்களுக்கு மட்டும் பணம் இல்லை, ஆனால் தற்போது பேரணிக்கு வந்த ஆட்களுக்கு கொடுக்க மட்டும் பணம் உள்ளதா..? என பாஜகவின

  • Lorry Upset 7 பேரின் உயிரை காவு வாங்கிய மினி லாரி : முந்திரி லோடு ஏற்றிச் சென்ற போது கோர விபத்து!
  • Views: - 403

    0

    0