மகளுக்கு Tution Fees கட்ட சொன்னாரு…
ஆயுதப்படை பயிற்சி பள்ளி துணை முதல்வர் மீது உணவக ஒப்பந்ததாரர் அதிரடி புகார் !!

Author: Babu Lakshmanan
22 June 2022, 6:48 pm
Quick Share

கரூர் மாவட்ட ஆயுதப்படை பயிற்சி பள்ளி துணை முதல்வர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக உணவக ஒப்பந்ததாரர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி உணவகத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன்.முத்துக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். சமூக நல ஆர்வலரும், கொரோனா காலத்தில் ஏராளாமான நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்த இந்த பொன் முத்துக்குமார், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது :- கரூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி துணை முதல்வராக தேவராஜ் என்பவர் செயல்பட்டு வருகிறார். நான் நடத்தி வரும் உணவக வருமானத்தில் அவரது குடும்ப செலவிற்கும், என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு என்னை டார்ச்சர் செய்து பணம் பெற்று வந்தார்.

மேலும், இதற்கு ஆதாரமாக, தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜ் என்பவரின் மகளுக்கு NEET பயிற்சி கட்டணம் ரூ.10,000/- செலுத்தியதன் இரசீது என்னிடம் உள்ளதாகவும், அதனை தொடர்ந்து, அதற்கு பயிற்சி கட்டணம் செலுத்திய அடுத்த வாரம் நான் நடத்தி வரும் உணவகத்திற்கு வந்து ரூ.50,000/-ஐ என்னிடமிருந்து பெற்று சென்றார்.

தொடர்ந்து, தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜ் அவர்கள் உணவகத்திலிருந்து எனக்கு வரும் வருமானத்தில் என்னிடம் கமிஷன் தொகை கேட்டும், லேப்டாப் கேட்டும் என்னை மிரட்டி தொந்தரவு செய்தும், உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மது வாங்கி கொடுத்து ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தேவையற்ற பிரச்சனைகளைத் தூண்டி விடுகிறார்.

தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜ் அவர்கள் கேட்கும் பணத்தையும், லேப்டாப்பையும் வாங்கிக் கொடுக்க இயலாததால், நான் நடத்தி வரும் உணவகத்தின் ஒப்பந்தத்தை இரத்து செய்து விடுவேன் என்றும், எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார் என்றும், எனவே தற்காலிக காவலர் பயிற்சியின் துணை முதல்வர் தேவராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து தொடர்ந்து உணவகம் நடத்த எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, தான் தமிழகத்தில் திமுக அரசின் ஒராண்டு ஆட்சி நிறைவு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வரின் துறையான காவல்துறையிலேயே லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளளது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக கரூர் எஸ்.பி யிடமே சமூக நல ஆர்வலரும், காவல்துறை ஆயுதப்படை வளாக தற்காலிக காவலர் பயிற்சி உணவக ஒப்பந்ததாரருமான பொன் முத்துக்குமார் புகார் கொடுத்திருப்பது தமிழக அளவில் பெரும் பரப்பினையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 566

0

0