கொரோனா நோயாளியுடன் 10 வயது சிறுவனை அமர வைத்த மருத்துவமனை நிர்வாகம் : கரூரில் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
1 December 2021, 1:22 pm
Karur corona - updatenews360
Quick Share

கரூர் : கரூரில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோருடன் சென்ற 10 வயது சிறுவனை, கொரோனா பாதித்தவருடன் அரை மணி நேரத்திற்கும் மேலாக அமர வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கோவை சாலையில் தனியார் (அப்போலோ) மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த 10 வயது சிறுவனும், அவரது தந்தையும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் கூறியதாவது :- 10 வயதான எனது மகனை காய்ச்சல் காரணமாக தனியார் (அப்பல்லோ) மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை வந்த நிலையில், ஒரு சிறிய அறையில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுடன் அரை மணி நேரமாக அமர வைத்திருந்ததாக கூறினார்.

அப்போது அருகில் இருந்த நபர்களிடம் தந்தை விசாரித்ததில் கொரோனா பாதித்த நபர்கள் என்று கூறியுள்ளனர். மகனுக்கு கொரோனா தொற்று பாதித்தால் அதற்கு காரணம் இந்த தனியார் மருத்துவமனை என குற்றம் சாட்டியுள்ளார். இதை கரூரில் உள்ள சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப்பில் அனைவரும் பகிர வேண்டும் என்று 10 வயது சிறுவனின் தந்தை வாட்ஸ்அப் குரூப்பில் பரப்பும்படி கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஸ்ரீதரிடம் கேட்ட போது, 10 வயது தந்தையுடன் பேசிய வீடியோ நானும் பார்த்தேன், அவர் மருத்துவமனையில் 10 நிமிடத்திற்கும் மேல் இருக்கவில்லை என்றும், அந்த அறையில் எக்ஸ்ட்ராஸ் பேன் வைக்கப்பட்டுள்ளது என்றும், அங்கு பணிபுரியும் செவிலியர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிகின்றனர். அரசின் வழிகாட்டுதலின்படி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களை அமர வைத்தும், அவர்களுக்கு எந்த மாதிரியான காய்ச்சல் என கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இருப்பினும், கொரோனா நோய் தொற்று தற்போது மழைக்காலம் என்பதினால் தீவிரமாக ஆங்காங்கே அதிகரித்து வரும் நிலையில், சிறுவன் காய்ச்சல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, கொரோனா காய்ச்சல் இருந்தவருடன் அரை மணி நேரம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தமிழக அளவில், சுகாதாரத்துறையிலும், மருத்துவத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 390

0

0