கஞ்சாவின் பிடியில் கரூர்… போதையில் பெண்களை மிரட்டும் இளைஞர்கள்… முதலமைச்சரின் பார்வை படுமா..?

Author: Babu Lakshmanan
30 June 2022, 12:49 pm
Quick Share

கரூரில் அடுத்தடுத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை உட்கொள்ளும் இளைஞர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொள்ளும் சம்பவங்களுக்கு தீர்வு கிடைக்காதா..? என்று பொதுமக்கள் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்து உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. கரூர் என்றாலே கஞ்சா, 24 மணி நேரமும் தொடர் மதுவிற்பனை, லாட்டரி ஆகியவைகள் இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவடிவேல் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய எஸ்.பி.யாக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டார். புதிய எஸ்.பி. பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, தற்போது வரை அதே குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணமே இருந்து வருகின்றன.

இந்நிலையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் சமயத்தில் பெண்களையும், பொதுமக்களையும் மிகவும் கேவலமாக நடத்தி வரும் நிலையில், புதன் கிழமை இரவு அன்று சுமார் 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் பெண்களையும், பொதுமக்களையும் தாக்க முயற்சித்துள்ளனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் அங்கிருந்து கஞ்சா போதை இளைஞர்கள் உடனடியாக தப்பித்து ஓடியுள்ளனர். இந்த காட்சிகள், கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள செல்வநகரில் தான் அரங்கேறியுள்ளது.

Cm Stalin Today - Updatenews360

தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 2ம் தேதி கரூருக்கு வர உள்ள நிலையில், உச்ச கட்டத்தினை நோக்கி கஞ்சா விற்பனை, 24 மணி நேரம் மதுவிற்பனையை தடுக்க ஏதேனும் புதிய உத்தரவுகளை பிறப்பிப்பாரா..? என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Views: - 573

0

0