கச்சத்தீவு அந்த வாரிசுகளுக்குத் தான் சொந்தம்… விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு ; அமைச்சர் ரகுபதி..!!

Author: Babu Lakshmanan
4 April 2024, 11:00 am

பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் சாமி வழிபாடு செய்த பிறகு, வீதி வீதியாக சென்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் வாக்குகளை சேகரித்தார்.

மேலும் படிக்க: இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; ஒரே நாளில் ரூ.360 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

திறந்தவெளி ஜீப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் திருவப்பூர் கோவில்பட்டி காட்டு மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குகளை சேகரித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது :- பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா இருப்பதாக தெரிகிறது. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த மோடி, கட்சத் தீவு குறித்து வாய் திறக்காமல், தற்போது தேர்தலுக்காக வாய் திறந்துள்ளது, இது உண்மை என்று காட்டுகிறது.

அண்ணாமலை கூறுவது போன்று எங்களுடைய தலைவர் கலைஞர் கட்ச தீவை அளிப்பதற்கு எந்த ஒப்புதலும் தரவில்லை. அவர் ஒரு ராஜதந்திரி இந்த பிரச்சனையை இரண்டு வருட காலம் ஒத்தி போட முடியுமா..? என்று தான் கலைஞர் கேட்டாரே தவிர, ஒரு போதும் விட்டுக் கொடுப்பதற்கு சம்மதிக்கவில்லை.

மேலும் படிக்க: எங்க சாமி அண்ணாமலை.. அவரை முழுசா நம்புறேன் ; நெஞ்சை உருக்கும் ஏழைத் தாயின் வீடியோ..!

கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு தான் சொந்தம். அவருடைய வாரிசுகள் இதுவரை எந்தவிதமான சொந்தமும் கொண்டாடவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் வாரிசு வழக்கு தொடர்ந்து கச்சத்தீவு எனக்கு தான் சொந்தம் என்று கூறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இந்த பிரச்சனை இரு நாட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை.

விரைவில் தமிழக அரசு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சார்ந்தவர்களையோ அல்லது பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயத்தினருடன் கலந்து பேசி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சர் தேவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டுவதற்கு தான் அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். இந்தியா – இலங்கை வரை பிரதமர் மோடி விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. இதனால் தான் மீனவர்களும் இலங்கை தமிழர்களும் வஞ்சிக்கப்படுகிறார்கள், எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வேட்பாளர் துரை வைகோ, கடந்த 10 ஆண்டுகளாக பாஜக கட்சத் தீவை மீட்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்படுவது விரட்டப்படுவது அதிகரித்து உள்ளதே தவிர, குறையவில்லை. பத்தாண்டுகளாக எதுவும் செய்யாமல் தற்போது கச்சத்தீவு குறித்து பேசுவது மலிவான அரசியல் கேவலமான அரசியல்.

நான் வெளியூர் காரனா..? உள்ளூர் காரனா..? என்ற பிரச்சினை கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, மக்களுக்கு சேவை செய்யலாம். உள்ளூர் காரர்கள் வெற்றி பெற்று அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விட்டார்கள் என்று யாராவது கூற முடியுமா..? என்றார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?