கவின் காதலிக்கு அடி உதை…. சிக்கிய 3வது நபர் : அதிரடி காட்டிய சிபிசிஐடி!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2025, 12:41 pm

நெல்லையில் கவின் ஆணவக் கொலை சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணயில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐடி ஊழியரான கவின், சாதியை மீறிய காதலால் படுகொலை செய்யப்பட்டார். காதலி பணிபுரியும் மருத்துவமனயில் தனது மாமாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள சென்ற கவினை, காதலியின் சகோதரர் சுர்ஜித் பேச வேண்டும் என அழைத்துள்ளார்.

பின்னர் கவினை வெட்டிப் படுகொலை செய்த அவர் தலைமறைவானார். பின்னர் இந்த சம்பவத்தில் சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும் காவல் ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஆணவக் கொலையை தடுக்க சட்டம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கினர்.

ஒரு பக்கம் இந்த வழக்கு குறித்த விசாரணை நடத்த சிபிசிஐடியிடம் ஒப்படைப்பட்டது.
இது குறித்த விசாரணையில், 3வது நபராக ஜெயபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், கொலை செய்தது எப்படி என சுர்ஜித்தை சம்பவம் நடந்த இடத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று ஆய்வு செய்தனர். கொலை செய்த பின் அவருக்கு அடைக்காலமாக இருந்தவர் ஜெயபால் என்பதும், சுர்ஜித்தின் பெரியம்மா மகன் என்பதும் தெரியவந்தது.

Kavin's girlfriend was kicked... 3rd person caught: CBCID takes action!

கவின் கொலையானது எப்படி சரவணனுக்கு தெரிந்தது என சிபிசிஐடி விசாரித்த போது, ஜெயபால் தான் முதலில் சரவணனுக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணன், கவின் காதலி சுபாஷினி பணிபுரியும் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சுபாஷினி தரதரவென இழுத்து அடித்துள்ளார். இது உண்மையான என சிபிசிஐடி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.

பின்னர், சுர்ஜித்தை உடனே காவல்துறைக்கு வரும்படி சரவணன் கூறியுள்ளார். ஜெயபால் செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர். சுர்ஜித் தாயாரின் அக்கா மகன் என்பதால் அவனை தவிர வேறு யார் இந்த கொலை சம்பவத்தை உடந்தையாக இருந்தனர் என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!