கோவையில் பிரபல நகைக்கடையில் தங்க நகைகளை திருடிய கேரள தம்பதி : ஒரு மணி நேரத்தில் சிக்கினர்!!

17 November 2020, 11:27 am
Theft Couple - Updatenews360
Quick Share

கோவை : கிராஸ்கட் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் நகைக் கடையில் இருந்து தங்க சங்கிலிகளை திருடிச்சென்ற கேரள தம்பதியினரை காட்டூர் போலீஸார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுதீஸ் , இவரது மனைவி ஷானி. இருவரும் நேற்று முன் தினம் கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள தனியார் நகைக்கடைக்கு நகை வாங்குவது போல் வந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஊழியர் செயின் மாடல்களை காட்டியுள்ளார். அனைத்து மாடல்களைப் பார்த்த அவர்கள் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து வந்து செயினை வாங்கிக்கொள்வதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து ஊழியர்கள் மீண்டும் செயின்களை வைக்கும் போது அதில் இரண்டு செயின்கள் மட்டும் மாயமானது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கடை மேலாளாருடன் சேர்ந்த கிராஸ்கட் ரோடு முழுவதும் தம்பதியினரை தேடினர்.

அப்போது தம்பதியினர் ஜவுளி கடைக்குள் செல்ல முயன்ற போது அவர்களை பிடித்து விசாரித்த போது செயினை திருடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுதீஸ், ஷானி தம்பதியினரை காட்டூர் போலீஸில் ஒப்படைத்தனர். செயின்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவுச் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.