தமிழகத்தில் விரைவில் ரூ.20க்கு மூலிகை பெட்ரோல்! முதலில் கேரளாவில் தொடக்கம்!!

4 September 2020, 4:32 pm
Herbal Petrol - Updatenews360
Quick Share

மதுரை : தமிழகத்தில் 20 ரூபாய்க்கு மூலிகை பெட்ரோல் வழங்க முடியும் என கேரளாவில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியை 10ஆம் தேதி துவங்கும் மூலிகை எரிபொருள் கண்டுபிடிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கழிவு நீர் மூலமும், விவசாய விவசாய கழிவுகளைக் கொண்டும் பயோ டீசல்,பயோ பெட்ரோல்,பயோ சமையல் எரிவாயு தயாரித்த ராமர்பிள்ளை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : கேரள அரசு மூணாறு பகுதியில் 1600ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துகொடுத்து மூலிகை பெட்ரோலை உற்பத்தியை உருவாக்க அனுமதி அளித்துள்ளதால் வரும் 10ஆம் தேதி முதல் உற்பத்தியை தொடங்குகிறோம் எனவும், மூலிகை பெட்ரோல்கள் குறித்து தவறான தகவலை பரப்பி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.

மூலிகை எரிபொருட்கள் என் மீது தொடரப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வு துறையில் போதிய ஆதாரத்தை நிருபிக்க இயலாத நிலையில் நீதிமன்றம் என்னை விடுவித்த நிலையில் மத்திய புலனாய்வுதுறை என் கண்டுபிடிப்பு குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறது என்றார்.

லடாக் பகுதியில் எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சனையை தீர்க்க இந்திய ராணுவம் என்னை அழைத்த நிலையில் சாதாரண டீசலை விட பயோ டீசல் வீரியம் மிக்கது என ராணுவத்தினர் ஒப்புகொண்டுள்ளனர் என்றார்.

என்னுடைய மூலிகை பெட்ரோலில கெமிக்கல் கலக்கவில்லை என்பதை நீதிமன்றமே நிருபித்துள்ளது என்றார். மேலும் பேசுகையில் இந்தியாவை முன்னேற்ற பயோ பெட்ரோல் தயாரிப்பை தவிர வேறு வழியில்லை, கேரளாவில் 77பகுதிகளில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்கவுள்ளோம் எனவும்,

தமிழகத்தில் பயோ பெட்ரோல் தயாரிப்பது குறித்து முதல்வரிடம் அனுமதி கேட்கவுள்ளோம், எனது கண்டுபிடிப்பிற்கு கார்ப்பரேட் எதிர்ப்பு கிடையாது மத்திய அமைச்சர்கள் சிலர் தடுக்கின்றனர், என்னுடைய தயாரிப்பை முடக்க நினைப்பவர் யார் என்பது குருமூர்த்திக்கு தெரியும்,

மூலிகை எரிபொருட்களை கேரளாவில் வரியுடன் சேர்த்து : டீசல், பெட்ரோல் விலை 39ரூபாய்க்கு கொடுப்போம், பயோ கேஸ் : 16லிட்டர் ரூ. 250க்கு வழங்கவுள்ளோம், தமிழகத்தில் தயாரிக்கும் போது பெட்ரோல் ஒரு லிட்டர் 20ரூபாய் விற்பனை செய்யவுள்ளோம், என்னுடைய கண்டுபிடிப்பை என் தாயிற்கு சமர்பிக்கிறேன் என்றார்.

Views: - 9

0

0