கேரளா நிலச்சரிவு : உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கனிமொழி ஆறுதல்!

25 August 2020, 4:34 pm
Kanimozhi - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலைபெட்டி முடியில் 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரில் சிக்கிய உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு , கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்த குடும்பங்களுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆறுதல் கூறினார்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலைபெட்டி முடியில் 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த 30 குடியிருப்புகள் முற்றிலுமாக தரைமட்டமானது. இதில் வசித்து வந்த 22 குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களில் 12 பேர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 70 பேர் காணமால் போய் இருந்தனர்.

தேசிய மீட்பு படையினர் மற்றும் கேரளா காவல்துறையினர் காணமால் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதுவரை 65 பேர் உடல்களை மீட்டுள்ளனர். இதில் 33 பேர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கயத்தார் பாரதி நகருக்கு வருகை தந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உயிரிழந்தவர்களின் திரு உருவப் படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செய்தார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதேபோன்று ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு கனிமொழி எம்பி ஆறுதல் கூறினார். அவருடன் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 9

0

0