‘வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்; மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர்’ : இடுக்கி சம்பவம் குறித்து வைரமுத்து கருத்து..!

13 August 2020, 5:17 pm
Vairamuthu -updatenews360
Quick Share

சென்னை : பலரின் உயிர்களை குடித்துள்ள இடுக்கி நிலச்சரிவு சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

மூணாறு அருகே பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 75க்கும் அதிகமான தமிழகத்தை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்டனர். அந்த குடியிருப்பு பகுதிகளில் மொத்தம் 83 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக 43 சடலங்கள் மீட்கப்பட்டது. தொடர்ந்து நடந்து வரும் மீட்பு பணிகளில் இதுவரையில் 55க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பிற்கு மத்தியில் கொச்சின் விமான விபத்து, இடுக்கி நிலச்சரிவுகளால் கேரள மாநிலம் மிகவும் துவண்டு போயுள்ளன.

இந்த நிலையில், இடுக்கி நிலச்சரிவு சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “விமான விபத்து மீட்சியைத்
திறம்பட நிகழ்த்திய கேரள
ஆட்சியைப் பாராட்டுகிறோம்.
அதேபோல் மண்ணில் புதைந்த
மக்களுக்கும் விரைந்த மீட்பும்
தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம்.
வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்;
மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப்
புரியாதா என்ன?”, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0 View

0

0