சாயா மாஸ்டரின் சாயம் வெளுத்தது : பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரிந்த கேரள இளைஞர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2021, 2:12 pm
திருப்பூர் : தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் கிராமத்தில் 20.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் கேரளாவை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பூளவாடி பிரிவில் தனியார் பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சார்ந்த நிபின் (வயது30). இவர் தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தலைமையில் இன்ஸ்பெகடர் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 20.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து நிபின்னை கைது செய்து தாராபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய போது கஞ்சா விற்றதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து நிபின் சிறையில் அடைக்கப்பட்டார் .
0
0