பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 11ம் தேதி முக்கிய அறிவிப்பு : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

7 November 2020, 7:22 pm
Minister Sengottayan- Updatenews360
Quick Share

மதுரை : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 11ம் தேதி முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மதுரை – விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, வரும் 9ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின் தமிழக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Tamil Nadu CM Palanisamy writes to Kerala counterpart Vijayan to issue  fishing passes - Republic World

மேலும் வரும் 11ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் குறைப்பது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Views: - 17

0

0