கிசான் திட்ட முறைகேடு சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்..!

6 September 2020, 4:17 pm
Quick Share

கிசான் முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் எல். முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் தமிழகத்தில் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக 9 மாவட்டங்களில் தலா ஆயிரம் பேர் வீதம் 9 ஆயிரம் பேர் மீது சிபிசிஐடி போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வருவாய்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோசடி செய்த பணத்தை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாஜக இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்பு விசாரணைக்குழுவை ஏற்படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகளை விரிவுப்படுத்தி உண்மையான விவசாயிகளுக்கு மட்டும் உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்தி நாளை காலை 11 மணி அளவில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் இது தொடர்பாக மனு அளிக்க உள்ளது.

விவசாய அணி உள்பட அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் ஆங்காங்கே அனைத்து மாவட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்று பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 0

0

0