கோடநாடு கொலை வழக்கு ; ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் சிபிசிஐடி போலீஸில் ஆஜர்…!!

Author: Babu Lakshmanan
17 October 2023, 11:42 am

கோடநாடு கொலை வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் ஐயப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, 200க்கும் மேற்பட்டவர்களிடம் கொலை மற்றும் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபாலிடம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

தற்போது கோவை பிஆர்எஸ் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஓட்டுநர் ஐயப்பனிடம் தற்பொழுது பிஆர் எஸ் மைதானத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து ஐயப்பன் கூறும் பொழுது, “உதகையில் உள்ள தனிப்படை போலீசார் என்னிடம் விசாரணை செய்து உள்ளனர். தற்போது இரண்டாவது தடவையாக கோவை பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை செய்து வருகின்றனர்,” என தெரிவித்தனர்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?