கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி…விராட்கோலி எடுத்த திடீர் முடிவு..!

Author: Selvan
20 December 2024, 1:57 pm

குடும்பத்தோடு லண்டன் செல்ல திட்டம்

கிரிக்கெட் ஜாம்பவானாக திகழும் விராட்கோலி இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

உலக அளவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விராட்கோலி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார்.

Virat Kohli family relocation

இந்த நிலையில் கோலியின் சிறு வயது பயிற்சியாளராக இருந்த ராஜ்குமார் சர்மா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் விராட்கோலி தன்னுடைய குடும்பத்தோடு,இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேற போகிறார் என்ற தகவலை கூறியுள்ளார் .

இதையும் படியுங்க: வைரலாகும் MISS U ASH ஹேஷ்டேக்…”அஸ்வின்”ஒரு சிங்கம்…செல்வராகவன் போட்ட பதிவு..!

மேலும்,விராட் கோலி தன்னுடைய மிரட்டலான பேட்டிங்கால்,பல வித சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சமமாக அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார்.

Cricket coach Rajkumar Sharma interview

விராட் கோலி உடல் தகுதியுடன் இருப்பதால் இன்னும் 5 ஆண்டுக்கு அவர் இந்தியாவிற்காக விளையாடுவார்,அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும்,2027 ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்காக நிச்சயம் விளையாடுவார்,அவரிடம் இன்னும் கிரிக்கெட் சாதனைகள் நிறைய உள்ளது என்று பயிற்சியாளர் சர்மா கூறியுள்ளார்.

சமீபத்தில்,இந்திய சுழற்பந்து வீரர் அஸ்வின் தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்த நிலையில்,தற்போது விராட்கோலி இந்தியாவை விட்டு லண்டன் செல்ல திட்டமிட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?