அதிமுக கூட்டத்தில் கேபி முனுசாமி ஆப்சென்ட்.. ஊதா கலர் வேட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி.. இதை கவனிச்சீங்களா?

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2023, 2:29 pm

அதிமுக கூட்டத்தில் கேபி முனுசாமி ஆப்சென்ட்.. ஊதா கலர் வேட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி.. இதை கவனிச்சீங்களா?

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கமான உற்சாகத்துடன் எழுச்சியுடன் துவங்கிய இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வந்த போது உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மேடையில் ஏறிய இபிஎஸ், எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இரட்டை இலை சின்னத்தை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு காட்டி உற்சாகப்படுத்தினார்.

வழக்கம் போலமேடையில் அவர் அமர்ந்ததும், அவருக்கு அருகே கேபி முனுசாமி அமர்வார். ஆனால் இந்த முறை கூட்டத்திற்கு அவர் வரவில்லை. விசாரித்தில் கேபி முனுசாமி அவர்களின் தந்தை மறைந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.

அதனால் பொதுக்கூட்டத்துக்கு அவர் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. அதே போல எப்போதும் கரை வேட்டியுடன் காணப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இந்த முறை ஊதா கலர் வேட்டியில் வந்திருந்தார்.

அவர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்துள்ளதால் கரை வேட்டியை அணியவில்லை. இந்த முறை இபிஎஸ் அருகே திண்டுக்கல் சீனிவாசனும் வலது புறத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அமர்ந்திருந்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!