போலந்து நாட்டு பொண்ணு… கிருஷ்ணகிரி பையன்… இனிதே நடந்த டும்..டும்…டும்..!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2024, 12:07 pm

போலந்து நாட்டு பொண்ணு… கிருஷ்ணகிரி பையன்… இனிதே நடந்த டும்..டும்…டும்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷன், இவர் தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து போலாந்து நாட்டில் தனது மேற்படிப்பை படிக்க சென்றார். பின்னர் தனது மேற்படிப்பை முடித்த ரமேஷன் போலாந்தில் USA VILLANOVA யூனிவர்சிட்டி என்ற பல்கலைக்கலகத்தில் ஆராய்ச்சித் துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் போலாந்து நாட்டில் கல்லூரியில் படிக்கும்போது அதே நாட்டை சேர்ந்த எவலினா மேத்ரோ என்ற பெண்ணுடன் ரமேஷனுக்கு காதல் மலர்ந்தது.

பின்னர் இரு வீட்டார் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் இன்று தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

வெளிநாட்டு பெண்ணுடன் கிருஷ்ணகிரி இளைஞர் திருமணம் செய்துகொள்வதால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானனோர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்…

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?