கத்தியை காட்டி மிரட்டி KTM பைக் கொள்ளை : திருப்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2021, 2:42 pm
KTM Bike -Updatenews360
Quick Share

திருப்பூர் : 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான (கேடிஎம்) பைக்கை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த மூவரில் இருவர் கைது செய்யப்பட்டு பைக்குடன் தலைமறைவான ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கருமலைப்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 21). அவிநாசி சந்தை மேடு பகுதியில் தனியாக வசித்துக்கொண்டு தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.

இவர் தனக்கு சொந்தமான 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது பைக்கில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கடந்த 18-ம் தேதி இரவு அவிநாசி திரும்பியுள்ளார். அவிநாசி அருகே கோவை பைபாஸ் ரோட்டில் வரும் போது அடையாளம் தெரியாத 3 பேர் வழிமறித்துள்ளனர். அவர் ஓட்டி வந்த பைக்கை தங்களுடையது எனக்கூறி, கத்தியை காண்பித்து மிரட்டி, அபகரித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பிரகாஷ், அவிநாசி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 20-ம் தேதி பழங்கரை பகுதியில் போலீசாரின் வாகன சோதனையின் போது, அவ்வழியாக நடந்து வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

போலீசார், அவர்களை விரட்டிப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தை சேர்ந்த கார்த்தி (வயது 23), திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரை சேர்ந்த செல்வகுமார் (வயது 23) என்பது தெரிய வந்தது. அவர்கள் தான், பிரகாஷின் பைக்கை வழிப்பறி செய்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். பைக்குடன் தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு அவிநாசி பகுதியில் இரவு வாகனத் தனிக்கையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் பாலாஜிசரவணன் (வயது 22) என்பதும் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை வழிப்பறி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய பல்சர் பைக்கும் பிரகாஷிடம் வழிப்பறி செய்த டியூக் பைக்கையும் மேலும் மிரட்டலுக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து பாலாஜி சரவணனை கைது செய்து சிறையிலடைத்தனர். வழிப்பறி செய்யப்பட்ட நான்கு நாட்களில் விலை உயர்ந்த பைக்கை அவிநாசி போலீசார் மீட்டு மூன்று பேரை கைது செய்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றது.

Views: - 93

0

0