நவ.,16ம் தேதி முதல் கோவில்களில் குடமுழுக்கு விழா : தமிழக அரசு அனுமதி!!

13 November 2020, 10:43 am
Kudamulukku Vizha - Updatenews360
Quick Share

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசு அமனுதி அளித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்ததால் தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் தமிகத்தில் வரும் 16ம் தேதி முதல் கோவில்களில் குட முழுக்கு விழா நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் குடமுழுக்கு விழா நடத்த அரசு தடை விதித்தது.

குடமுழுக்கு விழாவிற்கு பக்தர்கள் அதிகம் கூடுவதால் தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போது அதன் தளர்வுகளை நீக்கியுள்ளது. குடமுழுக்கு விழா நடத்தப்படும் கோவில்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்து விழாக்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 18

0

0